தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Thursday, April 10, 2014


வஞ்சக நெஞ்சம் கொண்டோர்
சதிவலை
அறுத்தெறியப்பட்டது.

BMS வழக்குஇரண்டாவது 

முறையும் தள்ளுபடி 

                            


       2009 ல் ஐ.டி.ஐ தொழில்நுட்பம் படித்து பணிக்கு வந்த 4000 கள உதவியாளர்களுக்கு கம்பியாளர் / வணிக உதவியாளர் பதவி உயர்வு வாரியத்தால் வழங்கப்பட்டு 2300 பேர் பதவியேற்பு செய்த நிலையில்  வஞ்சக நெஞ்சம் கொண்டோர் BMS தொழிற்சங்கம் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை பெற்று பதவி உயர்வுக்கு பங்கம் விளைவித்தது. நமது சங்கத்தின் சீரிய முயற்சியால் தடையாணை வழங்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட்டது.  

             வஞ்சக நெஞ்சம் கொண்ட சங்கத்தார்  பொறுக்க முடியாமல் மீண்டும் பதவி உயர்வுக்கு பங்கம் விளைவிக்க BMS தொழிற்சங்கம் மூலம் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்தது. அசராத மனமும் அயராத உழைப்பும் கொண்ட நமது சங்கத் தலைமை  நேர்மையாகவும் திறமையாகவும் பாடுபட்டதன் விளைவு நீதிமன்றம் இவ் வழக்கை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்தது. தர்மமே வென்றது.

பத்தாவது படித்து பணிக்கு வந்தவருக்கு அடிப்படை சம்பளம்!!!!!

கூடுதலாக இரண்டாண்டு தொழில்நுட்பம் படித்து பணிக்கு வந்தவருக்கு தொகுப்பு ஊதியம் (கருணைத் தொகையோ) !!!!!!!

       தன் அங்கமெலாம் நோக, நெஞ்சமெலாம் வெடிக்க, அடிவயிற்றில் இருந்துவிடும் சாபம் இதற்கு வித்திட்ட வீனரை சாம்பலாக்கும்.


இது சத்தியம் சத்தியம்.