தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Wednesday, January 28, 2015

லஞ்சம் வாங்காதஅதிகாரி

                                                              நன்றி! தினமலர் 
திரு.கண்ணன் / உதவிமின் பொறியாளர் / பன்னிமடை அவர்களுக்கு 

தமிழ்நாடு மின்சாரவாரிய  தொழிலாளர்  பொறியாளர் ஐக்கிய சங்கம், திருப்பூர் வட்டம் தன நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Tuesday, January 27, 2015

'துணை மின் நிலையங்களில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, அங்கு தகுதிவாய்ந்த ஊழியர்களை நியமிக்க வேண்டும்'.










பதிவு செய்த நாள்

26ஜன
2015 
23:41

'துணை மின் நிலையங்களில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, அங்கு தகுதிவாய்ந்த ஊழியர்களை நியமிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
90 ஆயிரம் பேர் பணி:


தமிழ்நாடு மின் வாரியத்தில், தொழில்நுட்ப உதவியாளர், பொறியாளர் என, 90 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். மின் வாரியத்திற்கு, 400, 230, 110, 33 கிலோவோல்ட் என, 1,500க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் உள்ளன. அனல், நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், துணை மின் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு, அதன் உயர் அழுத்தம் குறைக்கப்பட்டு, சீராக மின் வினியோகம் செய்யப்படுகிறது. சமீபகாலமாக, 'ஆயில் லீக்கேஜ், ஓவர்லோடு' போன்ற காரணங்களால், துணை மின் நிலையங்களில், குறிப்பாக, 110 கி.வோ., துணை மின் நிலையத்தில், தீ விபத்து மற்றும் பழுது ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இவற்றை தவிர்க்க, துணை மின் நிலையங்களில், தகுதி வாய்ந்த ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொது செயலர் சுப்ரமணியன் கூறியதாவது: தொழில்நுட்ப உதவியாளர்களாக இருப்போர், பதவி உயர்வு மூலம், இளநிலை பொறியாளர் இரண்டாம் நிலை என்ற பணிக்கு வருகின்றனர். இவர்கள் தான், 110 கி.வோ., துணை மின் நிலையங்களை இயக்க வேண்டும்.

1,700 இடங்கள் காலி:


மின் வாரியத்தில், 2,800 இளநிலை பொறியாளர் இரண்டாம் நிலை பணியிடம் உள்ளது. இதில், 1,700 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊழியர்களின் தகுதி அறிக்கை பெறப்பட்டு, கிடப்பில் உள்ளது. சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 'நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, நீதிமன்றம், ஐந்து மாதங்களுக்கு முன் உத்தரவிட்டும், மின் வாரிய அதிகாரிகள் அதை மதிக்காமல், பதவி உயர்வு வழங்காமல் புறக்கணித்து வருகின்றனர்.

பல கோடி ரூபாய் இழப்பு:


திறமையில்லாத ஊழியர் மூலம், 110 கி.வோ., துணை மின் நிலையம் இயக்கப்படுவதால், அவற்றில் விபத்து ஏற்பட்டு, மின் சாதனங்கள் பழுதாவதுடன், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனால், வாரியத்திற்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, காலி பணிஇடத்தை உடனே நிரப்பா விட்டால், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -                           
                                                                                      நன்றி  தினமலர்.