தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Wednesday, April 9, 2014


தினத்தந்தி திருப்பூர் செய்திகள்-09.04.201

   

மின்வாரியத்தில்
களப்பணியாளர் பதவி உயர்வை நிறுத்தி வைக்க கோரிக்கை
திருப்பூர், ஏப்.9-தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் கோவை மண்டலத்தின் சார்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு மின்வாரிய மஸ்தூர் களப்பணியாளர்களாக 2008-09ம் ஆண்டுகளில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு கள உதவி யாளர்களாக பதவி உயர்வு வழங்க சில கட்சி சார்ந்த தொழிற் சங்கங்களின் நிர்பந்தத்தின் அடிப்படையில் வாரியம் உத்தரவிட்டுள் ளது. அதன்படி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கட்சி சார்ந்த தொழிற்சங்கங்களின் நிர்பந்தம் காரணமாக இந்த செயல் மின்சார வாரியம் தவறாக செயல்படுத்தப்படுவதாக தெரிய வருகிறது. சென்னை ஐகோர்ட்டு தடை உத்தரவை ஏற்று களப்பணி யாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைத்த வாரியம், தற்போது மீண்டும் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக பணியாளர் களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவது தேர்தல் சுயலாபத்துக்காக என்பது தெரிகிறது. எனவே வாரியத்தின் தவறான நடவடிக்கையை கலெக்டர் தலையிட்டு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.