தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Thursday, December 25, 2014

    மின் வாரிய தொழிற்சங்கம் முறைகேடு ரகசிய ஓட்டெடுப்பு      நடத்த கோரிக்கை
தினமலர் முதல் பக்கம்   பொது செய்தி  தமிழ்நாடு

Advertisement

பதிவு செய்த நாள்

25டிச
2014 
01:40

மின் வாரியத்தில், தொழிற்சங்கம் பெயரில் நடக்கும், முறைகேட்டை தடுக்க, ஊழியர்களிடம், ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் என, 90 ஆயிரம் ஊழியர் பணிபுரிகின்றனர்.ஊழியர் பிரச்னை குறித்து, நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த, மொத்த ஊழியர்களில், 15 சதவீதம் ஆதரவு பெற்ற சங்கம், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக அறிவிக்கப்படும்.அந்த சங்கத்திற்கு, தனி அறை ஒதுக்கப்படுவதுடன், பணி மாறுதல், சம்பள உயர்வு குறித்து, இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தப்படும்.ஆனால், மின் வாரியத்தில், தேர்தல் நடத்தாமல், தொழிலாளர் சம்மேளனம், கணக்காயர் மற்றும் களத்தொழிலாளர் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக அறிவிக்கப்பட்டன.
கடந்த, 1996ல், தி.மு.க., ஆட்சியின் போது, அந்த கட்சியின் மின் வாரிய தொ.மு.ச., அங்கீகாரம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சி.ஐ.டி.யூ., போராட்டம் நடத்தியதை அடுத்து,அந்த சங்கமும் அங்கீகாரம்செய்யப்பட்டது.

பின், 2001ல் அ.தி.மு.க., ஆட்சியில், மின் வாரிய அண்ணா தொழிற்சங்கம் அங்கீகாரம் செய்யப்பட்டது.இவ்வாறு, பொது சங்கம், குறிப்பிட்ட சமுதாய சங்கம் என, மின் வாரியத்தில், தற்போது, 15 அங்கீகரிக்கப்பட்ட மற்றும் 10க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெறாத தொழிற்சங்கங்கள் உள்ளன.அரசியல் நோக்குடன் தொழிற்சங்கங்கள் துவக்கப்படுவதால், ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து, மின் வாரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால், ஆளுங்கட்சி, ஆண்ட கட்சி மற்றும் அவர்கள் ஆதரவு தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே, பயன் அடைந்து வருகின்றனர்.எனவே, மின் வாரிய ஊழியர்களிடம், ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

வாய்ப்பு மறுக்கப்படுகிறது: இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது:நிர்வாகத்தை எதிர்க்காத, தொழிற்சங்கம் அங்கீகாரம் செய்யப்படுகிறது. இதனால், ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை, நிர்வாகத்திடம், தைரியமாக எடுத்து பேச கூடிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது.எனவே, ஊழியர்களிடம், பொதுவான முறையில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி, அதில், 15 சதவீத ஆதரவு பெறும், தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்ய வேண்டும். அந்த சங்கத்திடம் மட்டும், ஊழியர் நலன் கருதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம், முறைகேடான தொழிற்சங்கங்கள் கண்டறியப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்தல் மூலம் தொழிற்சங்கம் தேர்வு செய்ய வேண்டும் என்பது வாரிய விருப்பம் ஆனால், தானாகவே தேர்தல் நடத்தினால், அரசியல் குறுக்கீடு ஏற்படும்.இதுகுறித்து, யாராவது, உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தால், அந்த தீர்ப்பை ஒட்டி தேர்தல் நடத்தி, தொழிற்சங்கம் அங்கீகாரம் செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -
                                                                    நன்றி-தினமலர் 

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

ஒருவிதமான ஆன்மீக கோழைத்தனம் பெரும்பாலான லௌதீக மக்களை ஒரே ஒரு மனிதன்தான் கடவுளின் புத்திரன் என்பதை சௌகரியமாக நம்புவதற்கு இட்டுச் செல்கிறது.அவர்கள் "இயேசு ,ஒப்பற்ற வகையிலே சிருஷ்டிக்கப் பட்டார்." என்று காரணங் காட்டி "இறந்து போகும் தன்மையுள்ள நான் எப்படி அவரைப் போல் ஆக முடியும்? என்கின்றனர்.ஆனால் எல்லா மனிதர்களும் தெய்வீகமாக சிருஷ்டிக்கப் பட்டிருப்பதால் என்றாவது இயேசுவின் கட்டளையை கீழ்ப்படிந்துதான் ஆகவேண்டும். "ஆகையால் பரலோகத்திலி இருக்கிற உங்கள் பிதா பூரன சற்குணனாயிருக்கிறது போல, நீங்களும் சற்குணனாயிருக்கக் கடவீர்கள்".(மத்த்தேயு 5;48) "நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்".( 1.யோவான் 3;1 பைபிள்)

Wednesday, December 17, 2014

TNEB TPAS GENERALBODY MEETING AND ELECTION 2014 - 2015

மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் தலைமை பொறுப்பாளர்கள் தேர்தல் 2014 - 2015 நாள் 14.12.2014

Saturday, November 15, 2014

                                                                                                  
2228 பதவிகளை காவு கேட்கும் கைங்கர்யம்!!
              விழித்தெழுவோம் வீறு கொள்வோம்!!              


animated-dice-image-0020
களப்பணியில் கல்வித்தகுதி உள்ளவர்களை 
பகடைக்  காய்களாக்கி
கொத்துப் புரோட்டா போடும் மின்வாரியம்.

Tuesday, October 21, 2014

Tuesday, July 1, 2014

                        
Enhancement of consolidated wages to the posts of Mazdoor (Trainee), Helper/ Office Helper (Trainee), Assessor Grade-II (Trainee), Assistant Engineer (Trainee) - Orders - issued.

Wednesday, May 14, 2014

      கருணை  அடிப்படையில் மாறுதல் கோரும் மனு
வெளி மாவட்டங்களில் இருந்து புதிதாக பணியில் சேர்ந்த கள உதவியாளர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  கருணை  அடிப்படையில் மாறுதல் கோரும் மனுவை பூர்த்தி செய்து  ஒப்புதல் அட்டையுடன் பதிவு தபாலிலும், ஒரு நகலை உரிய வழிமுறையாகவும், தலைமை பொறியாளர் / பணியமைப்பு  சென்னை அவர்களுக்கு சமர்பித்து அதன் நகலை தொழிற்சங்கத்திற்கு உடன் சமர்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருப்பூர் வட்ட தலைவர், செயலாளர் 
மற்றும் அனைத்துக் கோட்ட பொறுப்பாளர்கள் 

Tuesday, May 13, 2014

தருமபுரியில் கருணை அடிப்படையில் மாறுதல் கோரும் மனுவும்,
தருமபுரி வட்ட செயலாளரின் வாரியத்திற்கு கடிதமும் 
தருமபுரியில் C.I.T.U வின் அகோர முகத்திற்கு அற்புத பதில் !

ஐ.டி .ஐ. படித்த கள  உதவியாளர்களே கண் இமைக்காமல் படித்து 
கருத்தில் நிறையுங்கள்!
இதற்கு காரணமானவர்களே உங்கள் கண்களை மூடி மனக்கண்ணை திறக்க வழி  செய்யுங்கள்!

தருமபுரியில் செயலாளருடன் நேர்காணல் !
தருமபுரியில் C.I.T.U விற்கு ஐக்கிய சங்கம் கேள்விக் கனைகள் !
ஐ.டி .ஐ. படித்து  பணிக்கு வந்த கல உதவியாளர்களே 
நீங்கள் இதை கட்டாயம் படித்து புரிந்து கொள்ளுங்கள்!
தருமபுரியில்       C.I.T.U   வின்   அகோர முகம் !
ஐ.டி .ஐ  படித்து பணிக்கு வந்த கள உதவியாளர்களுக்கு இன்னுமா புரியவில்லை!
C.I.T.U விற்கு சந்தா கொடுத்த புதிய உறுப்பினர்களே 
சிகப்பு ஓநாயின் உண்மை முகத்திற்கு இன்னோர் சாட்சி!

தொழிற்சங்கம் தொழிலாளர்களை வாழவைக்கவா?சாகவைக்கவா?
கண்ணை நம்பாதே உன் னை ஏமாற்றும் 
மருதகாசியின் காவிய வரிகளை கேட்டு மகிழுங்கள் 

ஐ.டி .ஐ  படித்து பணிக்கு வந்த கள உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காதே என வாரியத்திற்கு கடிதம் !

Tuesday, May 6, 2014

மேதின விழா - திருப்பூர் வட்டம் 

   

Friday, May 2, 2014


வாழ்த்துக்கள். 

பதவி உயர்வு பெற்ற ஐக்கிய சங்க அடலேறுகளுக்கு வாழ்த்துக்கள். ஐக்கிய சங்க அடலேறுகள்  வெறும் பஞ்சு மூட்டைகள் அல்ல வைரகற்கள் - தர்மம் வென்றது.

Thursday, May 1, 2014

பதவி உயர்வு -நன்றி


நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு 
வழங்க உத்திரவு பெற்றவுடன் 
உடனடியாக பதவி உயர்வை வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி.

Tuesday, April 29, 2014

ஐ.டி.ஐ.படித்த மாணவர்களுக்கு புதிய  
வேலைவாய்ப்பு இணையதளம்! 
"ஸ்மார்ட் கார்டு" வழங்கப்படும். - தமிழக அரசு 
தினமலர் செய்தி  படிக்க
                      
                      
                        மின்விபத்தைதவிர்க்கவிழிப்புணர்வுஅவசியம் !
கோவை மண்டல தலைமைப் பொறியாளர் அறிவுரை !
தினமலர் செய்தி  படிக்க    

Monday, April 14, 2014

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்



     தமிழின், தமிழனின் பெருமை
 காணவும் புத்தாண்டு ராசி பலன்அறியவும்

       




Thursday, April 10, 2014


வஞ்சக நெஞ்சம் கொண்டோர்
சதிவலை
அறுத்தெறியப்பட்டது.

BMS வழக்குஇரண்டாவது 

முறையும் தள்ளுபடி 

                            

Wednesday, April 9, 2014

மஸ்தூர் களப்பணியாளர் பதவி உயர்வு - 
CITU  மின்வாரியத்தை நிர்பந்திப்பதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் 

தினமணி செய்தி வெளியீடு - 09.04.2014 
dindmani E paper       
.
தவறான பாதையில் செல்லும் மின்வாரியம் தினமலர், 

தினத்தந்தி திருப்பூர் செய்திகள்-09.04.201

   

Monday, April 7, 2014

அட்ரா சக்கை அட்ரா சக்கை

ஐ.டி.ஐ.படித்தவர்களை மின்வாரியத்தில் பணியமர்த்த 1980 ஆம் ஆண்டு முதல் கடுமையாக பாடுபட்டதாக 2014  ல் பணியேற்ற ஐ.டி,ஐ படித்தவர்களிடம் நீலிக்கண்ணீர் வடித்து அழுது பொய் ஒப்பாரி வைத்த CITIU வின் உண்மை முகத்தை காண இன்னொரு  (இன்றொரு) வாய்ப்பு!!!!!!

Saturday, April 5, 2014


wolf animated photo: Free Running Wolf (Animated) xxxxxx.gif

நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்
ராசா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்

Friday, April 4, 2014


animated wolf photo: Wolfie wolf.gif

சிகப்பு ஓநாயின் உண்மை சொரூபம்

சீனியர் வழக்கறிஞர் பேசுகிறார்

Sunday, March 30, 2014

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் படித்த பணியாளர்கள் மீது    மாற்று தொழிற் சங்கங்களின் தொடர்த் தாக்குதல்

Saturday, March 29, 2014

இப்படி கம்பம் ஏறினால் கால் வலிக்குமா ?

                               இப்படி கம்பம் ஏறினால் கால் வலிக்குமா ?
                                        சிந்திப்போம்! செயல்படுவோமா ?

                        

  பல்லடம் கோட்ட புதிய கள  உதவியாளர் அறிமுக விழா 

Thursday, March 20, 2014

BMS தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி

                            
                           தர்மத்தின்வெற்றி 
BMS தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி 

Wednesday, March 19, 2014

        அவினாசி கோட்ட புதிய கள  உதவியாளர் அறிமுக விழா 

                                       ஐக்கிய சங்க பொன்விழா 

Monday, March 10, 2014

பொன்விழா

                     இன்று பொன்விழா காணும் திருநாள்   





வாங்குவோம்     வாழ்த்துவோம்     வாழ்வோம்                   

Thursday, February 27, 2014

    ஒற்றுமை         விழிப்புணர்வு         நல்வாழ்வு.

 தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்.
                                          வாழ்த்துகிறோம்.வரவேற்கிறோம்


அன்புள்ள ஐ.டி.ஐ தோழர்களே உங்களை அன்போடு வரவேற்கிறது.

Wednesday, February 26, 2014

MEDICAL FITNESS

TAMILNADU ELECTRICITY BOARD

(CERTIFICATE OF PHYSICAL FITNESS (FOR CLASS III / IV SERVICE)

Tuesday, February 4, 2014

பதவி உயர்வு விருப்ப கடிதம் மாதிரி

                       

அனுப்புனர்,
                       எ.அப்துல்சலீம்,
                        ப.ப.எ.ண் ; 786
                        உதவியாளர்,
                       உ.மி.பொ /தெற்கு/சேயூர்
                       அவினாசி கோட்டம்.
பெறுநர்,        
                       மேற்பார்வை பொறியாளர் அவர்கள்,
                       திருப்பூர் மின் பகிர்மான வட்டம் ,
                       திருப்பூர்.
அய்யா, 
                       பொருள்; கள உதவியாளர்   பதவியில் இருந்து
                                         கம்பியாளர் /வணிக உதவியாளர் பதவி  உயர்வு
                                          - விருப்பம் தெரிவித்தல் -தொடர்பாக.

                       பார்வை;  BP NO 5 / 23.1.2014

                                                 ( முன் நகல் )

                      நான் உதவி மின் பொறியாளர் / தெற்கு சேயூர் பிரிவு அலுவலகத்தில் கள உதவியாளராக பனி புரிந்து வருகிறேன். மேற்காண் உத்தரவின் படி பதவி உயர்வு வழங்குவதாக தெரிய வருகிறது. வழங்கும்போது எனக்கு வணிக உதவியாளர் /கம்பியாளர்  பதவி உயர்வு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

                                                                                இப்படிக்கு 
                                                                    தங்கள் உண்மையுள்ள 

                                                                            A.அப்துல் சலீம்.



அனுப்புனர்,
                       எ.அப்துல்சலீம்,
                        ப.ப.எ.ண் ; 786
                        உதவியாளர்,
                       உ.மி.பொ /தெற்கு/சேயூர்
                       அவினாசி கோட்டம்.
பெறுநர்,      
                       மேற்பார்வை பொறியாளர் அவர்கள்,
                       திருப்பூர் மின் பகிர்மான வட்டம் ,
                       திருப்பூர்.
அய்யா,
                       பொருள்; கள உதவியாளர்   பதவியில் இருந்து
                                         கம்பியாளர் /வணிக உதவியாளர் பதவி  உயர்வு
                                          - விருப்பம் தெரிவித்தல் -தொடர்பாக.

                       பார்வை;  BP NO 5 / 23.1.2014

                                                 ( உரிய வழிமுறையாக  )

                      நான் உதவி மின் பொறியாளர் / தெற்கு சேயூர் பிரிவு அலுவலகத்தில் கள உதவியாளராக பனி புரிந்து வருகிறேன். மேற்காண் உத்தரவின் படி பதவி உயர்வு வழங்குவதாக தெரிய வருகிறது. வழங்கும்போது எனக்கு வணிக உதவியாளர் /கம்பியாளர்  பதவி உயர்வு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                இப்படிக்கு
                                                                    தங்கள் உண்மையுள்ள

                                                                            A.அப்துல் சலீம்.
முன் நகல் சமர்ப்பணம் ;

மேற்பார்வை பொறியாளர் அவர்கள்,
திருப்பூர் மின் பகிர்மான வட்டம் ,
திருப்பூர்.

Tuesday, January 14, 2014

Wednesday, January 1, 2014

தமிழ்நாடு மின் ஊழியர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வு, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு - சுமார் 81 ஆயிரம் பணியாளர்கள் பயன்பெறுவர் என்றும் தகவல்


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 700 ரூபாய் இருந்து 13 ஆயிரத்து 160 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்றும், இதன் மூலம் 80 ஆயிரத்து 980 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளும் பயன்பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும்; சுமுகமான தொழில் உறவுகள் மேம்பட வேண்டும் என்பதிலும்; தொழிலாளர் சட்டதிட்டங்களின்படி அவர்களுக்குரிய பயன்கள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதிலும்; புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதிலும் தமது தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார். 

பணியாளர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குவதில் அரசு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள தமது தலைமையிலான அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்துச் சலுகைகளையும் காலத்தே அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அந்த வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று முடிவடைந்த சூழ்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும் வகையில், ஊதிய மாற்றக் குழு ஒன்றினை அமைக்க தாம் ஆணையிட்டுள்ளதாகவும், அதன்படி ஊதிய மாற்றக் குழு ஒன்று கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று அமைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த ஊதிய மாற்றக் குழு, 15 தொழிற்சங்கங்களுடன் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது - இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்ட கருத்து பரிமாற்றங்களைக் கருத்தில் கொண்டும், ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை கணக்கில் கொண்டும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய உயர்வினை அறிவிப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் தற்போதைய ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்வு வழங்கப்படும் - இந்த ஏழு விழுக்காடு ஊதிய உயர்வு காரணமாக, ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் 700 ரூபாயும், அதிகபட்சம் 13 ஆயிரத்து 160 ரூபாயும் ஊதிய உயர்வு கிடைக்கும். 

பத்து ஆண்டு அல்லது அதற்கு மேல் பணியாற்றியவர்களுக்கு பணிக்கால பயனாக ஓர் ஆண்டு ஊதிய உயர்வு, அதாவது 3 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும். 

தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலையைப் பொறுத்த வரையில், அரசாணை எண் 237, நிதித் துறை நாள் கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் 22 ஆம் தேதியின்படி தமிழக அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதிய உயர்வு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் அளிக்கப்படும். காலமுறை ஊதியத்தில், அதிகபட்ச ஊதிய நிலையை எட்டிய போதும், ஆண்டுக்கொரு முறை தேக்க நிலை ஊதிய உயர்வு வழங்கப்படும். 

தற்போதுள்ள ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம் மாற்றமின்றி தொடர்ந்து வழங்கப்படும். தற்போதுள்ள படிகள் மற்றும் சிறப்பு ஊதியம் மாற்றமின்றி தொடர்ந்து வழங்கப்படும். தற்போதுள்ள 3 சதவீதம் ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும். 

பணியில் சேர்பவர்களுக்கான அதிகபட்ச பயிற்சி காலம் ஓராண்டாக இருக்கும் - பயிற்சி காலத்தில் தொகுப்பு ஊதியம் வழங்கப்படும்- தற்போது ஓராண்டிற்கு குறைவாக பயிற்சி காலம் உள்ள பதவிகளுக்கு தற்போது உள்ள நிலையே தொடரும் - பயிற்சி காலம் முடிந்ததும் காலமுறை ஊதியம் வழங்கப்படும். இது ஒப்பந்தத் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும். 

இந்த ஊதிய உயர்வு கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் - கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 25 மாதங்களுக்கான ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ரொக்கமாக இரண்டு தவணைகளில் வழங்கப்படும் - முதல் தவணை ஜனவரி 2014-லும், இரண்டாவது தவணை ஏப்ரல் 2014-லும் வழங்கப்படும். இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தம் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நான்கு ஆண்டுகள் அமலில் இருக்கும். இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தத்தின் மூலம் 70 ஆயிரத்து 820 பணியாளர்கள் மற்றும் 10 ஆயிரத்து 160 அதிகாரிகள் என மொத்தம் 80 ஆயிரத்து 980 பணியாளர்கள் பயன் பெறுவர். 

இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஆண்டொன்றுக்கு 252 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் - ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்கும் வகையில் 525 கோடி ரூபாய் செலவு ஏற்படும் - இச்செலவினங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிதியிலிருந்தே மேற்கொள்ளப்படும். தமது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, அவர்கள் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும், மனமகிழ்ச்சியுடனும் தங்கள் கடமைகளை ஆற்ற வழிவகுக்கும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

                                              இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

 


             
                 2014 ஆம் ஆண்டு இனிதாய்  அமைந்து எல்லா வளங்களும் பெற்று சிறப்புற்று வாழ வாழ்த்தி மகிழ்கிறோம்