தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Thursday, December 25, 2014

    மின் வாரிய தொழிற்சங்கம் முறைகேடு ரகசிய ஓட்டெடுப்பு      நடத்த கோரிக்கை
தினமலர் முதல் பக்கம்   பொது செய்தி  தமிழ்நாடு

Advertisement

பதிவு செய்த நாள்

25டிச
2014 
01:40

மின் வாரியத்தில், தொழிற்சங்கம் பெயரில் நடக்கும், முறைகேட்டை தடுக்க, ஊழியர்களிடம், ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் என, 90 ஆயிரம் ஊழியர் பணிபுரிகின்றனர்.ஊழியர் பிரச்னை குறித்து, நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த, மொத்த ஊழியர்களில், 15 சதவீதம் ஆதரவு பெற்ற சங்கம், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக அறிவிக்கப்படும்.அந்த சங்கத்திற்கு, தனி அறை ஒதுக்கப்படுவதுடன், பணி மாறுதல், சம்பள உயர்வு குறித்து, இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தப்படும்.ஆனால், மின் வாரியத்தில், தேர்தல் நடத்தாமல், தொழிலாளர் சம்மேளனம், கணக்காயர் மற்றும் களத்தொழிலாளர் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக அறிவிக்கப்பட்டன.
கடந்த, 1996ல், தி.மு.க., ஆட்சியின் போது, அந்த கட்சியின் மின் வாரிய தொ.மு.ச., அங்கீகாரம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சி.ஐ.டி.யூ., போராட்டம் நடத்தியதை அடுத்து,அந்த சங்கமும் அங்கீகாரம்செய்யப்பட்டது.

பின், 2001ல் அ.தி.மு.க., ஆட்சியில், மின் வாரிய அண்ணா தொழிற்சங்கம் அங்கீகாரம் செய்யப்பட்டது.இவ்வாறு, பொது சங்கம், குறிப்பிட்ட சமுதாய சங்கம் என, மின் வாரியத்தில், தற்போது, 15 அங்கீகரிக்கப்பட்ட மற்றும் 10க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெறாத தொழிற்சங்கங்கள் உள்ளன.அரசியல் நோக்குடன் தொழிற்சங்கங்கள் துவக்கப்படுவதால், ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து, மின் வாரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால், ஆளுங்கட்சி, ஆண்ட கட்சி மற்றும் அவர்கள் ஆதரவு தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே, பயன் அடைந்து வருகின்றனர்.எனவே, மின் வாரிய ஊழியர்களிடம், ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

வாய்ப்பு மறுக்கப்படுகிறது: இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது:நிர்வாகத்தை எதிர்க்காத, தொழிற்சங்கம் அங்கீகாரம் செய்யப்படுகிறது. இதனால், ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை, நிர்வாகத்திடம், தைரியமாக எடுத்து பேச கூடிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது.எனவே, ஊழியர்களிடம், பொதுவான முறையில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி, அதில், 15 சதவீத ஆதரவு பெறும், தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்ய வேண்டும். அந்த சங்கத்திடம் மட்டும், ஊழியர் நலன் கருதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம், முறைகேடான தொழிற்சங்கங்கள் கண்டறியப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்தல் மூலம் தொழிற்சங்கம் தேர்வு செய்ய வேண்டும் என்பது வாரிய விருப்பம் ஆனால், தானாகவே தேர்தல் நடத்தினால், அரசியல் குறுக்கீடு ஏற்படும்.இதுகுறித்து, யாராவது, உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தால், அந்த தீர்ப்பை ஒட்டி தேர்தல் நடத்தி, தொழிற்சங்கம் அங்கீகாரம் செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -
                                                                    நன்றி-தினமலர் 

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

ஒருவிதமான ஆன்மீக கோழைத்தனம் பெரும்பாலான லௌதீக மக்களை ஒரே ஒரு மனிதன்தான் கடவுளின் புத்திரன் என்பதை சௌகரியமாக நம்புவதற்கு இட்டுச் செல்கிறது.அவர்கள் "இயேசு ,ஒப்பற்ற வகையிலே சிருஷ்டிக்கப் பட்டார்." என்று காரணங் காட்டி "இறந்து போகும் தன்மையுள்ள நான் எப்படி அவரைப் போல் ஆக முடியும்? என்கின்றனர்.ஆனால் எல்லா மனிதர்களும் தெய்வீகமாக சிருஷ்டிக்கப் பட்டிருப்பதால் என்றாவது இயேசுவின் கட்டளையை கீழ்ப்படிந்துதான் ஆகவேண்டும். "ஆகையால் பரலோகத்திலி இருக்கிற உங்கள் பிதா பூரன சற்குணனாயிருக்கிறது போல, நீங்களும் சற்குணனாயிருக்கக் கடவீர்கள்".(மத்த்தேயு 5;48) "நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்".( 1.யோவான் 3;1 பைபிள்)

Wednesday, December 17, 2014

TNEB TPAS GENERALBODY MEETING AND ELECTION 2014 - 2015

மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் தலைமை பொறுப்பாளர்கள் தேர்தல் 2014 - 2015 நாள் 14.12.2014