தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Thursday, February 14, 2013

பிப்ரவரி 20, 21 அகில இந்திய வேலை நிறுத்தம்:


 பிப்ரவரி 20, 21 அகில இந்திய வேலை நிறுத்தம்:

இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் உள்ள


முக்கிய சங்கங்கள் ஒன்றிணைந்து தேசம் காக்கும் 

போராட்டம் நடத்த திட்டமிட்டு  இருக்கின்றனர். 


HMS, CITU, AITUC, INTUC, BMS,  முதற் கொண்டு 

முக்கிய மத்திய சங்கங்கள்,  மத்திய அரசின் மக்கள்

விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பிப்ரவரி 20

 மற்றும் 21 தேதிகளில் இரண்டு நாள் வேலை

நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுத்திருக்கின்றனர். 

பல கோடி தொழிலாளிகள் சங்கமிக்க இருக்கும் மிக

 உக்கிரமான போராட்டம் இது. நம் நாடு சுதந்திரம் 

பெற்ற பிறகு,மிக விரிவான தளத்தில் நடைபெற 

இருக்கும் மகத்தான தொழிற்சங்க வரலாற்று 


நிகழ்வு  இது.  மக்களை வாட்டி வதைக்கும் 

விலைவாசி உயர்விலிருந்து, தொழிலாளர்களுக்கு 

 பென்ஷன், போனஸ் உள்ளிட்டபலபிரச்சினைகளை 

முன்வைத்து இந்த இருநாள் வேலைநிறுத்தம் 


  நடைபெற இருக்கிறது.இதில் நமது தொழிற்சங்கம்


 வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அறிவிப்பு

05.02.2013 அன்று வாரியத்திற்கு கொடுத்துள்ளது.


கோரிக்கைகள்

1. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த 

வேண்டும்.


2. தொழிற்சங்க சட்டங்களை கறாராக 


    அமல்படுத்த வேண்டும்.


3. அணி திரட்டப்பட்ட/ திரட்டப்படாத 

தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப்  


பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

4. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் 


தாரை வார்ப்பது நிறுத்தப்பட வேண்டும்.

5. அவுட்சோர்சிங் நிறுத்தப்பட்டு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர 
     
     ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

6. குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கபட வேண்டும்.

7. போன்ஸ், பிராவிடண்ட் பண்ட் மற்றும் கிராஜுவிட்டியில் உள்ள உச்ச  
  
    வரம்புகளை நீக்க வேண்டும்.

8.அனைவருக்கும் போனஸ் உறுதி செய்யப்பட 

வேண்டும்.

                     
    
 இந்த வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச்                         

செய்யும் பொறுப்பும், அர்ப்பணிப்பும் நம் 

அனைவருக்கும் வேண்டும்.

                                                                        இப்படிக்கு 

          திருப்பூர் வட்ட மற்றும் அணைத்துகோட்ட பொறுப்பாளர்கள்.