தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Thursday, March 20, 2014

BMS தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி

                            
                           தர்மத்தின்வெற்றி 
BMS தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி 

       
         2007 - உடன்படிக்கை ஒப்பந்த தொழிலாளர்களை மஸ்தூர்களாக நிரந்தரம் செய்யப்படுவதற்கு சில புதிய பதவிகளை உருவாக்கி அதற்காக பணி வரன்முறைகளை உருவாக்கிடும் பொழுது ஏற்கனவே பணிவிதிகளில் உள்ள பதவிகளுக்கும், நேரடித் தேர்வு செய்யும் கள உதவியாளர்களுக்கும் கம்பியாளர் / வணிக உதவியாளர் பதவி உயர்வு பெற இரண்டு ஆண்டு அனுபவம் என்பதை ஐந்து ஆண்டு பணி அனுபவம் வேண்டும் என்று வாரிய பணிவிதிக்கு எதிராக போடப்பட்ட உடன்படிக்கையில் கையெழுத்திட்டது BMS சங்கம். இதனால் நேரடி தேர்வு மூலம் வந்த கள உதவியாளர்களுக்கும் மட்டுமல்ல மஸ்தூர்களின் பதவி உயர்வுக்கும் BMS கொள்ளிவைத்தது.
  
         இந்த முரண்பாட்டை ஐக்கிய சங்கம்  பல போராட்டங்களை நடத்தி 9.1.2014 உடன்படிக்கை மூலம் மீண்டும் இரண்டு ஆண்டாக பணி அனுபவ காலம்  குறைக்கப் பட்டது. இதனால் ஐ.டி.ஐ. படித்த  கள உதவியாளர் மட்டுமின்றி மஸ்தூர் பதவி மூலம் வந்தவர்களுக்கும் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஐக்கிய சங்கம் நல்வழி செய்தது. அந்த ஒப்பந்த்ததிலும்  கையெழுத்திட்டது BMS.

                  அதன்படி வாரியம் பதவி உயர்வு வழங்கிட உத்தரவு பிறப்பித்து BP NO 5 / 23.1.2014 பல்வேறு இடங்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டுவிட்ட நேரத்தில் ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பு செய்த, மீண்டும் நேரடியாக பதவி உயர்வை தடுக்க முடியாத கையாலாகாத சிலரின் தூண்டுதல்  பேரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து (W.P.NO 4292 / 2014)   தடை உத்திரவு பெற்றது.
       ஐக்கிய சங்கத்தின் தொடர் முயற்சியால் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்  BMS தொடுத்த மேற்கண்ட வழக்கு முற்றிலும்  தள்ளுபடி செய்யப்பட்டது.. பதவி உயர்வை தடுக்க தூண்டியோர் துண்டப்பட்டோர் மூக்கு அறுபட்டது. அவர்களின் பேச்சைக் கேட்டு ஐக்கிய சங்கத்தின் தலைமையினை அவமதித்தோர் முகத்திலும் கரி பூசப்பட்டது என்பதையும், வெற்றி ஒன்றே லட்சியம், ஒற்றுமையே வெற்றியும் என்பதையும் ஐக்கிய சங்கத்தின் அடலேறுகளுக்கு மகிழ்ச்சி பொங்க தெரிவித்துக் கொள்கிறோம்.