தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Monday, March 10, 2014

பொன்விழா

                     இன்று பொன்விழா காணும் திருநாள்   





வாங்குவோம்     வாழ்த்துவோம்     வாழ்வோம்                   



மின்வாரியத்தின் விடிவெள்ளியாய், மின்வாரிய களப்பணி தொழிலாளர்களுக்கும் ஓய்வுதியம் கொண்டு வந்து , தொலைநோக்கு பார்வையோடு தொழில் சார்ந்த பணிகளில் அடிப்படையில் இருந்து மாற்றம் கொண்டுவர எண்ணி , கள உதவியாளர் பதவிக்கான கல்வி தகுதி நான்காம் வகுப்பு என்ற கல்வித்  தகுதியை மாற்றி  N.T.C /    N.A.C ( I.T.I ) என்கிற கல்வித்  தகுதியை அரசு உத்தரவின் அடிப் படையில் 1986 ல் வாரிய பணி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து மின்வாரிய தொழிற் சங்கங்களின் கடுமையான எதிர்ப் பினையும் பொருட் படுத்தாது   7000  ஐ. டி .ஐ படித்தவர்களை  1987 ல் பணியில் அமர்த்தி நீதிமன்ற தடைகளையெல்லாம் தவிடுபொடியாக்கி எங்கள் வாழ்வுக்காகவும் , வாரியத்தின் எதிர்கால நலனுக்காகவும், ஒரு மூத்த வழக்கறிங்கறாய் மாறி  ஐ. டி .ஐ  இளைஙர்களுக்கு கள உதவியாளர் என்கிற கனியை உண்டு பருகுங்கள், எதிர்கால மின் வாரியத்திற்கு நலம் சேருங்கள் என்ற அன்புக் கட்டளையோடு எங்கள் வாழ்வில் ஒளிவீச வழிவகுத்திட்ட மரியாதைற்குரிய முன்னாள் மின்வாரியத்தலைவர் திரு.B.விஜயராகவன் I.A.S. அவர்களின் பாதங்களுக்கு எங்கள் நன்றியை சமர்பிக்கிறோம்.


              தொழிலாளர் ஐக்கிய சங்கத்தின் 25 ஆண்டு கால அளப்பரிய சாதனையை அடையாளப் படுத்திடும் நோக்கோடு வரலாற்று சுவடிகளை புரட்டிப்பார்த்து வருங்கால சந்ததியினர் புது வரலாறு படைத்திட மின்வாரியத்திற்கு ஒளி கொடுத்து வழி நடத்திட ஒற்றுமையாய்....... விளிப்புனர்வாய்........ நல்வாழ்வை நமதாக்கும் முயற்சியில் நேற்றும் இன்றும் நாளையும் அடலேறுகளின் அணிவகுப்பு தொடர அர்ப்பணிக்கிறோம்.