தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Sunday, March 30, 2014

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் படித்த பணியாளர்கள் மீது    மாற்று தொழிற் சங்கங்களின் தொடர்த் தாக்குதல்

                              தினமலர்  செய்தி  முழுமையாக பார்க்க  
                                          இங்கே கிளிக் செய்யவும்                                                        
அய்யய்யோ பொய்செய்தி பச்சை பொய்செய்தி
தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் இரண்டு 
லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஐ.டி.ஐ.முடித்தவர்களை உதவியாளர் பணிக்கு , மின் வாரியம் தேர்வு செய்யும்.

ஐ.டி.ஐ.படித்து வாரியப் பணிக்கு வந்த அன்பர்ககளே சிந்திப்பீர்



தமிழ்நாடு மின்சார வாரியத்தில் படித்த பணியாளர்கள் மீது மாற்று  தொழிற்சங்கங்களின் தொடர்த் தாக்குதல்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழிலாளர் ஐக்கிய சங்கத்தின் நீண்டகால போராட்டத்தின் பலனாக 2009 ஆம் ஆண்டு  ஐ.டி,ஐ, படித்த  4000 பணியாளர்கள் களஉதவியாளர்களாக   மாதாந்திர  தொகுப்பு  ஊதியத்தில் இரண்டாண்டுகள் பயிற்சியாக பணியமர்த்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தொழிலாளர் ஐக்கிய சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக தற்பொழுது 4000 ஐ.டி,ஐ பயின்ற நபர்கள் களஉதவியாளராக  ஓராண்டு பயிற்சியாக மாதாந்திர தொகுப்பு  ஊதியத்தில் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
     தொழிலாளர் ஐக்கிய சங்கத்தின் கோரிக்கை தொழில்நுட்பம் பயின்ற பணியாளர்களை பயிற்சி காலம் இல்லாமல் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என்பதே. அதற்காகவே தொழிலாளர் ஐக்கிய சங்கம் மின் வாரியத்தில் முறையீடு செய்து அது நிறைவேறாத சூழலில் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் 2009ல் பணியேற்ற 4000 களஉதவியாளர்களுக்கு வாரியத்தில் பணியேற்று சுமார் நாலரை ஆண்டு காலங்கள் ஆன நிலையில் 9.1.2014 நாளன்று வாரியத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி வாரியத்தில் பணியேற்று இரண்டாண்டுகள் முடிந்த களஉதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கலாம் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் கம்பியாளர் மற்றும் வணிக உதவியாளர் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த பொழுது மேற்படி ஐ.டி.ஐ. படித்த பணியாளர்களுக்கும் பதவி உயர்வு கிடைக்கும் என்பதால் அதனைத்  தடுக்கும் முகமாக மாற்று தொழிற்ச்சங்கங்கள் களப்பணிக்கு சம்பந்தமே இல்லாத BMS  தொழிற்ச்சங்கத்தின் மூலமாக மேற்படி பதவி உயர்வுக்கு சம்பந்தம் இல்லாத ஒப்பந்த சரத்துக்களை காரணம் காட்டி உயர் நீதி மன்றத்தில் கடந்த 13.02.2014 நாளன்று தடை உத்தரவு பெற்றன.

மேற்படி தடை உத்தரவை தொடர்ந்து வாரிய தலைமை களப்பணி பதவி முழுமைக்கும்  எந்த உத்திரவும் பிறப்பிக்காது அன்றையே நிலையே (STATUS QUO) தொடர வேண்டும் என அறிவுறுத்தி அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் மின்அஞ்சல் மூலமாக அன்றையே தினமே உத்தரவு இட்டது.

மேற்படி வழக்கில் தொழிலாளர் ஐக்கிய சங்கம் உடனடியாக தன்னை இணைத்துக் கொண்டு  மேற்படி தடை  உத்தரவை ரத்து செய்ய பெருமுயற்சி மேற்கொண்டது. வாரியத்தையும் தொழிற்ச்சங்கமாக நிர்பந்தித்து மேற்படி வழக்கில் தீர்வு காண முயற்சி மேற்கொண்டது. இதற்கிடையில் பாராளுமன்ர தேர்தல் அறிவிப்பு வெளிவர உள்ளதை கருத்தில் கொண்டு அரசியல் சார்ந்த தொழிற்ச் சங்கங்கள் அரசியல் லாப நோக்கோடு செய்த நிர்பந்தத்தின் பேரில் வழக்கு தொடுத்த BMS தொழிற் சங்கம் மஸ்தூர் பதவியில் இருந்து கள உதவியாளர் பதவி உயர்வு வழங்க தனக்கு ஆட்சேபனையில்லை என கடிதம் கொடுத்தாக காரணம் காட்டி   4.03.2014 அன்று மஸ்தூர் பணியாளர்களை களஉதவியாளர்களாக பதவி உயர்வு செய்ய அறிவுறுத்தும் வாரிய உத்திரவு வெளியிடப்பட்டது.

ஆனால் நீதி மன்ற தடை உத்தரவின் பேரில் களப்பணி பதவி முழுமைக்கும் எந்த உத்திரவும் பிறப்பிக்காது அன்றையே நிலையே        ( STATUS QUO ) தொடர வேண்டும் என அறிவுறுத்திய முந்தைய வாரிய உத்திரவுக்கு எதிராக இந்த உத்திரவு வெளியிடப்பட்டது. எனவே மாற்று தொழிற் சங்கங்களின் தவறான வழிகாட்டுதலின் பேரில் ஒருதலைப் பட்சமாக செயல்படும் இந்த வாரியத்தின் தவறான போக்கினை தடுக்கும் முகமாக தொழிலாளர் ஐக்கிய சங்கத்தின் கிளைகள் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு முறையீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்படி விதி மீறல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேற்படி தடை உத்திரவு வழங்கப்பட்ட வழக்கின் விசாரணையை காலதாமதப் படுத்தும் நோக்கில் தான் தொடுத்த வழக்கில் வாதாடாமல் BMS  தொழிற் சங்கம் நீதிமன்றத்தில் தொடர்ந்து வாய்தா வாங்கியதால் 20.03.2014 அன்று BMS  தொழிற் சங்கம் தொடுத்த வழக்கு முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட்டது.






எனவே நீதிமன்ற தடை நீங்கியதால் நமது தொழிற்சங்கம் சார்பில் பதவி உயர்வுக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது மஸ்தூர் பதவியில் இருந்து களஉதவியாளர் பதவிக்கு ஆவன செய்யுமாறு வாரியம் வாய்மொழி உத்திரவு அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் வழங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் தினமலர் நாளேட்டின் வாயிலாக மாற்றுச் சங்கங்கள் இதே BMS  தொழிற் சங்கம் வாயிலாக தேர்தல் ஆணையத்திற்கு மேற்படி செய்தித் தாளில் கண்டவாறு தொழிநுட்பம் பயின்று வாரியப்பணிக்கு வந்த பணியாளர்கள் மீதான தொடர் தாக்குதலை தொடர்ந்து செய்து தங்களது தொழிற் சங்க கடமையை சிறப்பாக செய்து வருகின்றன.

            தொழில்நுட்பம் பயின்ற தொழிலாளர் மீதான தொட்ர் தாக்குதலை தொழிலாளர்களின் பார்வையில் இருந்து மறைக்கும் விதமாக தேர்தலை காரணம் காட்டி அரசு மீதும் மின்துறை அமைச்சர் மீதும் பழி சுமத்தியுள்ளனர்.