தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Saturday, March 29, 2014

  பல்லடம் கோட்ட புதிய கள  உதவியாளர் அறிமுக விழா 

                          ஐக்கிய சங்க பொன்விழா 

          
              பல்லடம் கோட்டத்தில் புதிய கள  உதவியாளர் அறிமுகவிழா மற்றும் ஐக்கிய சங்க பொன்விழா பாதுகாப்பு பயிற்சி விழா 28.03.2014 அன்று பல்லடம் பி.எம்.ஆர். சுப்புலட்சுமி கல்யாணமண்டபத்தில்  மாலை ஐந்து மணிக்கு சிறப்பாக நடை பெற்றது. அதில் பல்லடத்தில் புதியதாக பதவியேற்பு செய்த கள உதவியாளர்கள்   (பயிற்சி) ,  மற்றும் அவினாசி , பல்லடம்   திருப்பூர் கோட்ட  நிர்வாகிகள்  மற்றும் திருப்பூர் வட்ட நிர்வாகிகள்  மற்றும் கோவை மண்டல செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் முதலில் இனிப்பு வழங்கி விழா துவங்கியது                    
                                           .         
     
         விழாவிற்கு  பல்லடம் கோட்ட துணைத் தலைவர் திரு.அனந்தசுப்பிரமணியம் வரவேற்புரையாற்றிப் பேசினார். திரு K.P.ராஜேந்திரன்  தலைவர் பல்லடம்  கோட்டம்  தலைமை வகித்து பேசினார். திரு அ.லோகநாதன், தலைவர் அவினாசி கோட்டம் வாழ்த்துரை வழங்கிப் பேசினார். திரு.A.ரவிச்சந்திரன்  செயலாளர் பல்லடம் கோட்டம்  மற்றும்  உதவி செயலாளர் திரு.S.மனோகரன், திரு.K.செந்தில்குமார்,   திருப்பூர் வட்டத் தலைவர் திரு N.கார்த்திகேயன், அமைப்பு செயலாளர் திரு.R.மனோகரன் ஆகியோர் விளக்கவுரையாற்றி பேசினார்கள். திரு.த.சீனுவாசன் வட்டசெயலாளர் அவர்கள் சிறப்புரை யாற்றினார். கோவை மண்டல செயலாளர் திரு.R.கண்ணன் அவர்கள் பேருரையாற்றிப்  பேசினார்.

                  விழாவில் பேசிய அனைவரும் ஐ.டி .ஐ படித்தவர்களை வாரியப் பணியில் சேர்க்க ஐக்கிய சங்கம் கடந்த பதினேழு ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தைப் பற்றியும் , அந்த காலகட்டத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களை வாரியப் பணியில் சேர்க்க  விடாமல் அரசியல் மூலமாகவும் , நீதிமன்றம் மூலமாகவும்  தடைகளை ஏற்படுத்தி வந்தவர்கள் இன்று ஐக்கியசங்கத்தின் தொடர் முயற்சியால் பணிக்கு சேர்ந்தவர்களிடம் பணிக்கு சேர்ந்த முதல் நாளிலேயே நாங்கள்தான் உங்களுக்கு பணியேற்க  வகை செய்தோம் என்று பச்சைப் பொய் பேசி சந்தா நன்கொடை  என வசூல்   செய்த    வெக்கக்கேடான செயல் பற்றியும், அவர்களுக்கு இதில் ஒரு அருகதையும் கிடையாது என்பதையும், ஐக்கிய சங்கம் ஒன்றிற்கே அந்த தகுதி உள்ளது என்பதையும் தெளிவாக விளக்கிப் பேசினர்.  மேலும் புதிய கள  உதவியாளர்கள்  பணியில் பாதுகாப்பாக எப்படி பணிபுரிவது என்பது பற்றியும் விலக்கிப் பேசினர்.
            மேலும் புதிய கள  உதவியாளர்கள் நாங்கள் மிக பாதுகாப்பாக பணிசெய்வோம் என்றும்,   நாங்கள் என்றும் ஐக்கிய சங்கத்தின் உறுப்பினர்கள்தான் என்றும் அதன் தியாக உணர்ச்சியை என்றும் நினைவில் கொள்வோம் என்றும் உறுதி கூறினர்.
        
                இறுதியாக திரு.பல்லடம் கோட்டம்    உதவி செயலாளர் திரு.S.மனோகரன் அவர்கள் மேற்கண்ட சங்கங்களின்   செயல்களுக்கு ஆதாரங்கள் அளித்து நன்றியை நவில விழா இனிதே நிறைவுற்றது.