தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Saturday, November 15, 2014

                                                                                                  
2228 பதவிகளை காவு கேட்கும் கைங்கர்யம்!!
              விழித்தெழுவோம் வீறு கொள்வோம்!!              


animated-dice-image-0020
களப்பணியில் கல்வித்தகுதி உள்ளவர்களை 
பகடைக்  காய்களாக்கி
கொத்துப் புரோட்டா போடும் மின்வாரியம்.

1-    களப்பணி தொழிலாளர்களுக்கு வரும் காலங்களில் ஒரே முதன்மை பட்டியல் பராமரித்திடும் வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த  வாரிய ஆணை 106 ன் படி முதன்மை ஒருங்கிணைக்கப் படவேண்டும்.

2-   9.1.14 அன்றுபோடப்பட்ட 12/3 -ஒப்பந்தத்தின் படி களப்பணியாளர்களுக்கான பதவி ஒப்புதல்கள் வழங்கப்பட வேண்டும்.

3-  தொழில்நுட்ப  மேம்பாட்டின் அடிப்படையில் நிர்வாக வசதிக்காக 
 ACS /CS பதவிகள்  உருவாக்கிட விரும்பினால் அதை ஒருங்கிணைந்த முதன்மை பட்டியல் வாயிலாகவே பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

4- மின்சார பணிகளை ஆட்கள் பற்றாக்குறையாலும் ஏற்கனவே இருந்து வந்த 4000  LM பதவிகளை ரத்து செய்த காரணத்தினால் மின்சார பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் தகுதியான நபர்களின் மேற்பார்வையின்றி  தனித்து வேலை செய்து மின் விபத்துக்கு ஆளாகி உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்த்திடும் வகையில் ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திற்கும் ஒரு கூடுதல் LI பதவிகளை அனுமதிக்க வேண்டும்.

5- பல்வேறு பதவிகளுக்கு பணி அனுபவ காலத்தைக் குறைத்து பதவி உயர்வு வழங்குவது போல LI பதவிக்கும் 8 ஆண்டுகள் பணி அனுபவ
கால அளவை ரத்து செய்து  உத்திரவிட வேண்டும்.

6- ஒருங்கிணைந்த  முதன்மை பட்டியலில் கள உதவியாளர் மட்டும் 
விருப்பத்தின் அடிப்படையில் CA / WM பதவி வழங்கிட வேண்டும்.

7- CA / WM மற்றும் LI / CI பதவிகளுக்கான தேர்வுப்பட்டியல் ஒரே நேரத்தில் ஒப்புதல் வழங்கிடவும் இதன் அடிப்படையிலேயே முகவர் பணியை பூர்த்தி செய்திடவும் வேண்டும்.

       வாரியம் கொடுத்துள்ள முன்வடிவில் உள்ள முரண்பாடுகளையும், களப்பணித் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கிடும் வகையிலும் தொழிலாளர் நலன் காக்க வாரியம் எடுத்திட வேண்டிய நிலையான கொள்கை முடிவுகள் குறித்து மேலே கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நிர்வாக குழுவின்  முடிவின்படி வருகிற 17-11-2014 முதல் மாலை 05.05 மணிக்கு அனைத்து மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக விளக்க வாயிற் கூட்டம்  கீழ்க் கண்டவாறு நடந்திட உள்ளது.

17.11.14 ;  வேலூர், ஈரோடு, விழுப்புரம், நீலகிரி, தூத்துக்குடி,
                 கரூர்,  தேனீ

18.11.14 ;  சேலம், தஞ்சாவூர், சிவகங்கை, உடுமலை, கன்னியாகுமரி.

19.11.14    திருப்பூர்,கடலூர், தருமபுரி, இராம்நாடு, விருதுநகர்,
                பெரம்பலூர்.

20.11.14 ;  திருச்சி, திருவண்ணாமலை, மேட்டூர், கோவை வடக்கு,
                 தெற்கு, மற்றும் பெருநகர்.

21.11.14 ;  திருநெல்வேலி, செங்கல்பட்டு, நாமக்கல், நாகை,
                 திருவாரூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர்.     
    
22.11.14 ;  மதுரை EDC, மதுரை METRO, திண்டுக்கல், கோபி,
                 கள்ளக்குறிச்சி.

24.11.14 ;  கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம்.

26.11.14 ;  சென்னை மின்வாரிய தலைமையகம் சென்னை மையம்,
                 வடக்கு,தெற்கு மற்றும் மேற்கு மின் வட்டங்கள்.


ஐக்கிய சங்கத்தின் அடலேறுகள் அனைவரும் கட்டாயம் திரளாக கலந்து கொண்டு நமது வலிமையை பறைசாற்றிடவும் சூழ்ச்சி வலையை தகர்த்து எரிந்து நீதியை நிலை நாட்டவும் அணிவகுக்க தயாராவீர் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

                                       இவண்..............

                                    தலைவர் / செயலாளர்
             அனைத்து திட்டம் / வட்டம் மற்றும் கோட்டம்