தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Tuesday, December 31, 2013

                                                            இரங்கல் 
                               
                                      

அவினாசி கோட்ட துணைத்தலைவர் திரு.அப்துல் சலீம் (சேயூர் தெற்கு பிரிவு அலுவலகம்) அவர்களின் மச்சான் (சகோதரியின் கணவர்) திரு.சையத் பசீர் அகமத்  மாரடைப்பால் 30.12.2013 அன்று காலமானார்.அண்ணாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனடி சேரவேண்டிக்கொண்டும் , அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

                                                      இப்படிக்கு ,
அணைத்துக் கோட்ட பொறுப்பாளர்கள்,மற்றும் தொழிலாளர்கள்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ,
                                                 திருப்பூர் வட்டம்.

Monday, November 11, 2013

              ஐ .டி .ஐ  தொழிற்கல்வி பயின்றவர்கள் நேரடி தேர்வு.


                                         வாழ்த்தி வரவேற்கிறோம்.


         மின்துறையின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி என்ற சூழலில் மின் துறையை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டிய கட்டாயமும், மின் உற்பத்தியை பெருக்கிடவும் மாண்புமிகு தமிழக  முதல்வவர் அம்மா அவர்களின் கனவான தடையற்ற மின்சாரம், தரமான மின்சாரம் வழங்கிட மின்வாரியத்தின் கட்டமைப்பை பலப்படுத்திட வேண்டிய அவசியத்தை உணர்ந்து சங்கத்தின் பெரும் முயற்சியால் 4000  ஐ .டி .ஐ  தொழிற்கல்வி பயின்றவர்களை  நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்திட முடிவு செய்து நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு வந்திருக்கிற சகோதர சகோதரிகளை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறோம்.உங்களது வருகை மற்ற நிறுவனங்களைப் போல சராசரி நிகழ்வு அல்ல, அது ஒரு நீண்ட , நெடிய போராட்ட வரலாறு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஐ .டி .ஐ  தொழிற்கல்வி பயின்றவர்களை  நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்திட எதிர்த்து நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தொழிற்சங்கங்களை இனம் கண்டு கொள்ளுங்கள். உங்களின் உணர்வுகளுக்கு புரிந்துணர்வோடும், அர்பணிப்பு உணர்வோடும் செயல்பட்டு வரும் தொழிலாளர் ஐக்கிய சங்கம் உங்களை வாழ்த்தி வரவேற்கிறது.